தராபாத்

பாஜகவின் எம் எல் ஏ தாஜ்மகால் துரோகிகள் கட்டியது என தெரிவித்ததற்கு ஒவைசி பதில் அளித்துள்ளார்.

பா ஜ க வின் மீரட் தொகுதி எம் எல் ஏ ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் “தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜஹான் ஒரு துரோகி.  கொடுங்கோலர்.  தாஜ்மகால் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஒரு கறை” என குறிப்பிட்டிருந்தார்.   அந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இஸ்லாமிய மத பிரமுகரான அசாதுதின் ஒவைசி அதற்கு முதள் ஆளாக பதில் கொடுத்துள்ளார்.

அவர், ”தாஜ்மகாலைக் கட்டியது துரோகி என எம் எல் ஏ குறிப்பிட்டுள்ளார்.  செங்கோட்டையக் கட்டியதும் துரோகிதான்.  அங்கு ஏன் மோடி வருகிறார்.  அங்கு எதற்காக கொடியை ஏற்றுகிறார்?   இனி மோடியும் யோகியும் தாஜ்மகாலுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தடை செய்வார்களா?” என தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.   மேலும் ”ஐதராபாத் மாளிகையும் துரோகி கட்டியதே.  இனி மோடி அங்கு வெளிநாட்டு பிரமுகர்களை அங்கு சந்திப்பதை நிறுத்தப் போகிறாரா?” எனவும் கேட்டுள்ளார்.