புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்த சவுமியா சேகர் சாஹூ என்பவருக்கும் ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ம் தேதி திருமணம் நடந்தது.

21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் பெறப்பட்ட புதுமண தம்பதியர் ஆவலுடன் பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு பரிசு பொருள் பயங்கர சத்ததுடன் வெடித்தது.

இதில் புதுமாப்பிள்ளை சேகர் சேகர்சாஹூ, அருகில் இருந்த அவரது பாட்டி ஆகியோர் உயிரிழந்தனர். புதுமணப் பெண் ரீமா சாஹூ காயமடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.