னாஜி

த்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கோவா மது பார் தொடர்பாக புதிய சிக்கல் எழுந்துள்ளது

சமீபத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள், கோவாவில் சட்ட விரோதமாக மதுபான விடுதி நடத்தி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டினர்.  இந்த விவகாரம் நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   பாஜகவினர் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஸ்மிருதி இரானி, இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இதை விசாரித்து ‘காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டுப் பொய்யானது, அது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்,’ என உத்தரவிட்டது.

தற்போது, காங்கிரஸ் முன்னாள் செயலாளர் கிரிஷ் சோதன்கார், ”மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் முகவரியில் இருந்துதான் கோவா மதுபான விடுதி இயங்குகிறது. கோவா மதுபான விடுதியுடன் அவருடைய ஜிஎஸ்டி எண், பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது,” எனக் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டால் மத்திய பாஜக அமைச்சர்  ஸ்மிருதிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. பாஜ தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.