ஸ்ரீநகர்:
அமீத்ஷாவுக்கு பதிலடி கொடுத்து ஓமர் அப்துல்லா கொடுத்த ஓடோமாஸ் பதிலடி அரசியல் வட்டாரத்தில் பெரிதும் ரசிக்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் பேசிய பாஜக தலைவர் அமீத்ஷா, ஒன் ரேங்க் ஒன் பென்சன் (One Rank One Pension) என்றால், ஒன் ராகுல், ஒன் பிரியங்கா என, இருவரது முதல் ஆங்கில எழுத்தை ஒப்பிட்டு பாஜக தலைவர் குறிப்பிட்டார்.
இதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஓமர் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார்.
மோடியும் ஷாவும் அளவுக்கு மீறி செயல்பட்டதால் மக்களுக்கு பாதிப்பு என்ற அர்த்தத்தில் ஓவர்டோஸ் ஆஃப் ஒன்லி மோடி ஒன்லி ஷா (ODOMOS) என ஒரே வார்த்தையில் மோடி மற்றும் ஷா பெயரை உள்ளடக்கினார்.