டேராடூன்: உத்தரகாண்டில் கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய கூடாது என்று மத அமைப்பு வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் மாற்று மதத்தை சேர்ந்த சிறுவன் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து யுவா வாகினி என்ற அமைப்பு இந்து கோவில்களில் இந்து மதம் அல்லாதவர்கள் நுழைய கூடாது என்று அறிவிக்கும் வகையில் பேனர்களை தயாரித்து 100க்கும் மேற்பட்ட கோவில்களில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த சர்ச்சைக்குரிய பேனர்கள் நீக்கப்பட்டன. இதை செய்த இந்து யுவா வாகினி அமைப்பினர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.