திருவனந்தபுரம்

ட இந்தியாவை சேர்ந்த யாரும் மலையாளமோ தமிழோ கற்பதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள மும்மொழி பாட வரைவு திட்டத்துக்கு தென் இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.    இந்த திட்டத்தின் படி இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், மாநில மொழி மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    இதனால் இந்தி மொழி இம்மாநிலங்களில் திணிக்கப்படுவதாக போராட்டம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் அரசு தரப்பில் இந்தி பேசும் மாநிலங்களில் மாநில மொழியை கற்பது கட்டாயம் என கூறபட்டுள்ளதாக கூறப்படுகிறது.     இது குறித்து சசி தரூர், “மும்மொழி கொள்கையை தடை செய்ய வேண்டும் என நான் கூறவில்லை.  அதை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

இதற்கு முன்பு இதே போல் 1960களில் இதே திட்டம் தவறாக அமுல்படுத்த பட்டதால் அது தோல்வி அடைந்துள்ளது.

இந்த மும்மொழி திட்டம் என்பதே பொதுவாக தென் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து வருவதால் இங்கு அது தோல்வி அடைகிறது.    தென் இந்தியாவில் பலர் இந்தியை கற்றுக் கொண்டுள்ளனர்.   ஆனால் வட இந்தியாவில் யாரும் மலையாளம் அலல்து தமிழை கற்றும் கொள்ளவில்லை.” என தெரிவித்துள்ளார்.