இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 4 நாள்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் நாள்தோறும் 15,000 என்ற எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இதையடுத்து மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்  உள்ளிட்ட மாநிலங்களில் சுகாதார தடுப்பு பணிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந் நிலையில் அருணாசலபிரதேச மாநிலத்தில் 4 நாள்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்படி அம்மாநிலத்தில 3 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்தமாக 16,781 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.