டில்லி

மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் குறித்து புதிய விதிகள் 2021 ஐ மத்திய மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசால் நாடெங்கும் மின்சார பரிமாற்ற கட்டமைப்பை எளிதாக அணுகுவதற்கும், பரிமாற்ற அமைப்பு திட்டத்தை மாற்றியமைக்கவும் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மத்திய மின்துறை  அமைச்சகம் மின்சார பரிமாற்ற முறை திட்டம், மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற கட்டணங்களைப் பெறுதல் விதிகள் 2021-ஐ அறிவித்துள்ளது.

இந்த விதிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக கவனம் செலுத்துதல் மற்றும் சந்தை முறையின் வளர்ச்சி போன்ற பல துறை முன்னேற்றங்கள் போன்றவை நீண்ட கால அணுகல் அடிப்படையிலான தற்போதைய பரிமாற்ற திட்டமிடல் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியதை அவசியமாக்குகிறது.

இவ்வாறு மாநிலங்களுக்கு இடையேயான மின்சார பரிமாற்ற அமைப்பில், பொது கட்டமைப்பு அணுகல் என்று அழைக்கப்படும்,  மின் பரிமாற்ற அணுகல் முறையை இந்த விதிகள் அனுமதிக்கின்றன.  மாநிலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப மின் பரிமாற்ற திறனைப் பெறுவதற்கும், வைத்திருப்பதற்கும் மற்றும் மாற்றுவதற்கும் நெகிழ்வுத்தன்மையை இவை வழங்குகிறது.  ஆகவே, இந்த விதிகள் பரிமாற்றத் திட்டமிடல் செயல்பாட்டில் விவேகம், பொறுப்பு, நேர்மை மற்றும் அதன் செலவுகளைக் கொண்டுவரும்.

இப்போது உள்ள பரிமாற்ற அணுகல் முறையிலிருந்து ஒரு பெரிய மாற்றமாக, மின் நிலையங்கள் அவற்றின் இலக்கு பயனாளிகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.   மாறாக இந்த விதிகள் மாநில மின் விநியோகம் மற்றும் பரிமாற்ற நிறுவனங்களுக்கு அவற்றின் பரிமாற்றத் தேவைகளைத் தீர்மானிப்பதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் அதிகாரம் அளிக்கும். மேலும், மாநிலங்கள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால ஒப்பந்தங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க முடியும். அவற்றின் மின் கொள்முதல் செலவை உகந்ததாக மாற்ற முடியும்  என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது