சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான  நீட் (NEET) நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மே 3ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டணம் உள்ளிட்ட எந்த சந்தேகமாக இருந்தாலும் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 011 – 40759000 என்ற தொலைபேசி எண்ணை அழைத்தோ அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப்படிப்பு (MBBS, BDS), கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு பராமரிப்பு (BVSc & AH), ஆயுர்வேதம், யூனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுதப்படை மருத்துவ சேவைகள், நர்சிங் படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ஒரே நுழைவு தேர்வாக நீட் தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்க நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்வு தேதி:

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வரும் மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இளநிலை நீட் தேர்வு 2026 மே 3ம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தமாக 3 மணிநேரம் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் – கட்டணம்

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.8) முதல் தொடங்கியுள்ளது. மார்ச் 8ஆம் தேதி இரவு 9 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த மார்ச் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரையும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் வசதிக்கு மார்ச் 10 முதல் 12 வரையும் அவசாகம் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான கட்டணமாக பொதுப் பிரிவுக்கு ரூ.1,700-ம்; பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC-NCL) ரூ.1,600-ம்; எஸ்சி-எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000; வெளிநாட்டுத் தேர்வு மையங்களுக்கு ரூ.9,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி மற்றும் சேவை கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.inன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட எந்த சந்தேகமாக இருந்தாலும் மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 011 – 40759000 என்ற தொலைபேசி எண்ணை அழைத்தோ அறிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான பாடத்திட்டம்

இளநிலை நீட் தேர்வில் மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில், தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்திலிருந்து 360 மதிப்பெண்களும், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடத்திலிருந்து 180 மதிப்பெண்களும் அடங்கிய கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டங்கள் https://nmc.org.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ளது. அதனடிப்படையிலேயே கேள்விகளும் இடம்பெறும்’ என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]