மூன்று முறை தேசிய விருது வென்ற நடிகை சுரேகா சுக்ரி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
1978-ம் ஆண்டு வெளியான ’கிசா குர்சி கா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா சிக்ரி.
1988-ம் ஆண்டு வெளியான தமாஸ், 1994-ம் ஆண்டு வெளியான மம்மோ மற்றும் 2019-ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ ஆகிய மூன்று படங்களில் நடித்ததற்காக 3 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.