மும்பை

மும்பையில் ஓடும் தண்ணீர் லாரிகள் வருடத்துக்கு ரூ.8000-10000 வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தண்ணீர் டேங்கர் லாரிகள் தொழிலை மாஃபியா என பலரும் அழைக்கின்றனர்.    இது நாடெங்கும் பொதுவான வார்த்தை என்னும் போதிலும் மும்பையில் இது மிகவும் அதிகமாக சொல்லப்படுகிறது.    இதற்கான காரணத்தை அறிய சற்றே மும்பை நகர நீர் வழங்கும் துறையையும் மாநகராட்சியின் விதிமுறைகளையும் அறுந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் தண்ணீர் லாரிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டன.  ஆனால் தற்போது நகரெங்கும் குடிநீர் விநியோகம் லாரிகள் மூலமே நடைபெறுகின்றன.   தடை செய்யப்பட்ட போது நகரில் சுமாராக 600 க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் சென்றுக் கொண்டிருந்தது.   தற்போது அது 6200 ஐ தாண்டி விட்டது.

அது மட்டுமின்றி இந்த லாரிகளில் அடிபட்டு மரணமடைவோர் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்துள்ளது.   மும்பை நகரில் விபத்துக்களில் மரணம் அடைவோரில்  பெரும்பாலானோர் தண்ணீர் லாரிகளில் மோதி அடிப்பட்டு இறப்பவர்கள் ஆவார்கள்.   இந்த தண்ணீர் லாரிகள் எந்த ஒரு போக்குவரத்து விதிகளை அல்லது சிக்னல்களை மதிக்காத போதிலும் இதை காவல்துறையினர் கண்டுக் கொள்வதில்லை.

இதற்கு முக்கிய காரணம் பணம் ஆகும்.  இந்த லாரி உரிமையாளர்கள் மும்பை மாநகராட்சி அதிகாரிகளையும் காவல்துறையையும் ஒரு சில அரசியல்வாதிகளையும் பணத்தின் மூலம் அமைதி ஆக்கி விடுவதாக கூறப்படுகிறது.   அது மட்டுமின்றி இந்த தண்ணீர் லாரிகள் பல அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் நகரில் எங்குமே குழாய் மூலம் நீர் விநியோகம் செய்வது இல்லை.  எனவே தண்ணீர் லாரிகளின் தேவை  மாநகராட்சிக்கு அவசியமாகி உள்ளது.   நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு லாரியும் அதிகபட்சம் 40 டிரிப்புகள் செல்ல வேண்டி உள்ளது.    ஆகையால் பல இடங்களில் காவல்துறையினருக்கு தண்ணீர் லாரிகளை தடுத்து நிறுத்தக் கூடாது என வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த லாரிகள் தனியாரிடம் இருந்து தண்ணீர் பெறுவதில்லை.   மாநகராட்சியிடம் இருந்து பெற்ற தண்ணீரை தங்கள் சொந்த நீராக மக்களுக்கு அளித்து வருகின்றன.      இதனால் மாநகராட்சி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.   அத்துடன் குடிநீர் விநியோகத் துறை வெப்பம் காரணமாக நீர் ஆவியாவது மற்றும் ஒழுகுவது, பூமியில் உறிஞ்சப்படுவது என கணக்கு காட்டுவதை சோதனை செய்ய இயலாத நிலை உள்ளது.

இவ்வாறு தினந்தோறும் சுமார் 2407 மில்லியன் லிட்டர் நீர் காணாமல் போவதாக கணக்குகள் தெரிவிக்கின்றன.    அத்துடன் குழாய் மூலம் அளிக்கப்பட்ட நீர் மக்களுக்கு  போய் சேராததற்கு மேற்கூறிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.   இதனால் மும்பை நகரில் பல பகுதிகளில் லாரிகள் மூலம் நீர் அனுப்பப்படுகின்றன.   நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழிறங்கி உள்ளதால் மக்களுக்கு இந்த லாரிகளின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.

தினமும் இந்த காணாமல் போன நீருக்காக ஒவ்வொரு லாரியும் 2.4 லட்சம் டிரிப்புகள் செல்ல வேண்டி உள்ளது.   ஒவ்வொரு லாரிக்கும் குறைந்த பட்சமாக ரூ.2000 அளிக்கப்பட்டு வருகிறது.  அதாவது ஒரு நாளக்கு இந்த லாரிகள் ரூ. 48 கோடி வருமானம் பெறுகின்றன.   எனவே குறைந்தது வருடத்துக்கு இந்த லாரிகள் ரூ17000 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த லாரி உரிமையாளர்கள் வருடத்துக்கு ரூ. 7000 கோடி வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.   இந்த பணம் லஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.  மொத்தத்தில் இந்த தொழிலில் வருடத்துக்கு ரூ.8000 கோடி முதல் ரூ.10000 கோடி வரை வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது.