கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் கடந்த மாதம் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார். மன அழுத்தம் அதிகமானதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. உண்மையான காரணம் வேறு ஏதாவது இருகிறதா என்பதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். குடும்பத்தினர், நண்பர்கள், காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்களிடம் விசாரணை நடந்திருக்கிறது. இந்நிலையில் சுஷாந்த் கடைசியாக நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையிடம் விசாரணை நடந்துள்ளது.

சுஷாந்த் நடித்த கடைசி படம் ’தில் பேச்சாரா’. இதில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா சங்கி. படப்பிடிப்பின் போது விரும்பதாகாத சம்பவம் அல்லது வேறு ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா? கடைசியாக சுஷாந்த் சொன்னது என்ன? மன அழுத்தம்பற்றி அவர் ஏதும் வெளிப்படுத்தினாரா என பல்வேறு கோணங்களில் சஞ்சானாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர். அவர் அளித்த வாக்குமூலம்பற்றிய தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை
Patrikai.com official YouTube Channel