போபால்: மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் எழுதியுள்ள கடிதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கமல்நாத் தனது கடிதத்தில், கடந்த காலங்களில் தேர்தல் பணிகளில் பாரபட்சமாக நடந்துகொண்ட மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளை பட்டியலிட்டு தனக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார் கமல்நாத்.
இந்தக் கடிதத்தின் மூலம், மாநில காங்கிரஸ் அரசு, அதிகாரிகளை மிரட்ட நினைப்பதாகவும், எனவே, முதல்வர் கமல்நாத் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கோரியுள்ளது.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்ததால், அதிகாரிகள் மத்தியில் அரசியல் செல்வாக்கு படிந்திருக்கலாம் என்றும், தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கான காங்கிரசின் முயற்சிதான் இதுவென்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.