சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலோர் கருத்து; இந்த விவகாரத்தில் ஆய்வுக்குழுவினராக எங்களது தனி கருத்துக்களை நாங்கள் முன் வைக்கவில்லை, ஓய்வுபெற்ற நீதிபத ஏ.கே.ராஜன் தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராய்வதற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்தது. இந்த குழுவினர் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி ஏ.கே.ராஜன், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 80 ஆயிரத்திற்கு அதிகமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு குறித்து 165 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே ஏராளமானோரின் கருத்தாக உள்ளது என்று கூறியவர், நீட் தேர்வின் தாக்கம் குறித்த முக்கிய அம்சங்கள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் விளக்கப்பட்டுள்ளதாக என்றார்.
மேலும், இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ளவேண்டும். உளவியல், பொருளாதாரம், சமூகநீதி, சட்டபிரச்சனை என நிறைய உள்ளன. அனைத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம்.
நீட் என்பது தேர்வு மட்டும் இல்லை தமிழர்களின் உரிமை,வாழ்வாதாரம் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்ங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன்வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் மத்தியஅரசு நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும்என்றும், நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து விண்ணப்பங்களும் பெற்று வருகிறது.