அமெரிக்காவின் பிரபல டிவி நிகழ்ச்சியான ஓப்ரா வின்பிரே-யின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சஸக்ஸ் கவுன்டியின் பிரபு ஹாரி மற்றும் அவரது மனைவி மேஹன் மெர்கெல் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சி இன்றிரவு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது, நேற்றிரவு இதன் முன்னோட்டம் வெளியானது, இது உலகம் முழுதும் இன்று வைரலானது.
பக்கிங்ஹாம் அரண்மனையில் நான் இளவரசியாக வலம்வந்த போது, பல்வேறு பாகுபாடுகளுக்கு ஆளானேன், என்னையும் என் மகனையும் சிறுமைபடுத்தினார்கள், என்று மேஹன் மெர்கெல் கூறினார்.
“நான் ஏன் இனி உயிரோடு இருக்க வேண்டும் என்று கூட நினைத்த நேரம் உண்டு” என்று கூறி நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்ளிட்ட அனைவரையும் அதிரவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே அண்ணாந்து பார்க்கும் மகாராணியின் அரண்மனையை சேர்ந்த மருமகளுக்கு இப்படி ஒரு நினைப்பு வர என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள இங்கிலாந்து மக்கள் மட்டுமல்ல அனைவருமே ஆவலோடு காத்திருக்கின்றார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஜோடி தங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வேண்டாம் என்று கூறி, இங்கிலாந்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் டிரைலர் மட்டுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் என்னவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.