டில்லி

பொதுமக்களிடம் இருந்து பெற்ற நிதியை தனது மக்களின் கல்விக்கு மாவோயிஸ்டுகள் தலைவர்கள் பயன்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் கட்சி வளர்ச்சி மற்றும் சமுதாய சீர்திருத்தங்களுக்காக பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர்.   இந்த நிதி உதவிகளை தலைவர்கள் தங்களின் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க மத்திய அரசு உள்துறை அமைச்சகம் ஒரு நன்னடத்தை குழுவை அமைத்துள்ளது.

அந்தக் குழு ஆய்வுகளை நடத்தியதில் மாவோயிஸ்ட் தலைவர்கள் கட்சி நிதியை தங்கள் சொந்த செலவுக்கு உபயோகப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு நிகழ்ந்த முறைகேடுகள் பட்டியலை அந்தக் குழு வெளியிட்டுள்ளது.

1.       பீகார் – ஜார்கண்ட் பகுதி மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு செயலரான பிரத்யுமன் சர்மா கடந்த 2017 ஆம் வருடம் தனது மருமகளுக்கு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க சேர்க்கைக் கட்டணமாக ரூ. 22 லட்சம் அளித்துள்ளார்

2.       கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு அறிவிக்குப் பின் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் சந்தீப் யாதவ் ரூ. 15 லட்சம் பழைய நோட்டுக்களை மாற்றி உள்ளார்.

3.       மற்றொரு தலைவரான அரவிந்த் யாதவ் தனது சகோதரர் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க ரூ. 12 லட்சம் கட்டணம் செலுத்தி உள்ளர்.

4.       கட்சியின் கட்டிட நிதியாக என பெறப்பட்ட பெரும்பாலான பணம் பல தலைவர்களின் வீட்டை சீரமைக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது.   மேலும் பல தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி செலவுக்கு இதிலிருந்து பணம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகியவை இந்த பட்டியலில் உள்ளன.