கொல்கத்தா: சிகிச்சை முடிந்து மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இன்று வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்திகிராமில் உள்ள துர்கா கோயிலில் வழிபட்ட பின்னர் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தம்தை தள்ளிவிட்டதாக மமதா பானர்ஜி பரபரப்பு புகார் தெரிவித்தார்.

கால் பகுதியில் பலத்த காயமடைந்த மமதா கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில்  மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:

முதலமைச்சர் மமதா பானர்ஜி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் உரிய அறிவுறுத்தல்களுடன் அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 7 நாட்களுக்கு பிறகு மறு பரிசீலனை செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று  தெரிவித்தனர்.