மலபார் ஹில்
மகராஷ்டிர மாநில போலீஸ்காரர் தனது தபால் வாக்கை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி உள்ளார்.
வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பணியி00ல் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர். இவர்களில் கணேஷ் ஷிண்டே ந்ன்னும் அஸ்தி தொகுதிக்கான தபால் ஓட்டை மலபார்ஹில் வாக்குப்பதிவு மையத்தில் செலுத்தினார்.
அப்போது அவர் வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு சீட்டை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். இவ்வாறு தபால் வாக்கு சீட்டை போலீஸ்காரர் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக மலபார்ஹில் தேர்தல் அதிகாரியிடம் புகார் வந்தது.
எனவே தேர்தல் விதிகளை மீறி வாக்கு சீட்டை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த போலீஸ்காரர் கணேஷ் ஷிண்டே மீது காவ்தேவி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.