சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், காஃபி தூளினால் மகாத்மா காந்தியின் 74 வகையான உருவப்படத்தை வரைந்துள்ளார். கின்னஸ் சாதனை முயற்சியாக அவர் இதை செய்துள்ளார்.
நாட்டின் விடுதலையாக போராடியவர் மகாத்மா காந்தி. இன்றைய நிலையில், அவரை இந்தியர் ஒவ்வொருவரும் நினைவு கூற வேண்டியது கடமையாகும். இந்த நிலையில்,  சென்னை  கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும்  சிவராமன் என்பவர் காஃபி தூளினால் மகாத்மாவின் உருவப்படத்தை வரைந்துள்ளார்
 74வது சுதந்திரதினமான இன்று, கின்னஸ் சாதனை முயற்சியாக 2020 சதுர அடி கொண்ட துணியில் 74 விதமான காந்தியின் உருவங்களை 24 மணி நேரத்தில் வரைந்துள்ளார்.
முழுக்க முழுக்க காஃபி தூளை கரைத்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வரையும் இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிரமாண்ட உருவப்படத்தை வரைந்த இளைஞரின் முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் காஃபி தூள் கரைசலின் மூலம் 1,704 சதுர அடியில் அந்நாட்டு வரைப்படத்தை வரைந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.