மதுரை:

லக மக்களை அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி கோரோனோ வைரஸ் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில், சிகிச்சைக்காக தனி வார்டு தயார் செய்யப்பட்டு  திறக்கப்பட்டு உள்ளது.

இந்த வார்டு திறப்பு விழா, ஏதோ பிரமாண்டமான நிகழ்ச்சி போல நடைபெற்றது., வார்டு முன்பு ரங்கோலி கோலமிட்டும், வார்டை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும், விழாவில் வந்தவர்களுக்கு சாக்லெட் கொடுத்தும்  ஆடம்பரமாக திறக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உயிர்க்கொல்லி நிமோனியா வகை வைரஸ் சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவி வருவதை, உலக மக்களும், உலக சுகாதாரத்துறையும் அச்சத்துடன் கவனித்து, அதை தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், தமிழகத்திலோ இந்த நோய் தடுப்பு குறித்து, மாநில அரசு எந்தவித முன்னெச்சரிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் ஏனோதானோவென்று  ஒரு வார்கை தயார் செய்து திறந்துள்ளனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ள ஒரு வார்டை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்கி அவர்களை  பேணிக்காப்பதே  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடமை.

ஆனால், இவற்றுக்கு மாறாக, வார்டு திறப்பு விழாவை ஏதோ, சந்தோஷ நிகழ்வு போல சுவிட் எடுத்து கொண்டாடி திறந்துள்ளது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. சமூக வலைதளங்களில் அரசு மருத்துவர்களின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது…