மும்பை:
ஐபிஎல் தொடரில் டெல்லி – லக்னோ அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் பிரிதிவி ஷா அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்தார். லக்னோ அணி பந்து வீச்சாளர்களில் ரவி இரண்டு விக்கெட்களையும், கிருஷ்ணப்பா கவுதம் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணி 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியில் குயின்டன் டி காக் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார். டெல்லி அணி பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டையும், லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் லக்னோ அணி ஆறு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப், குஜராத் அணிகள் மோத உள்ளன.