டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 6கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நாளை மறுதினம் (ஜுன் 1ந்தேதி) 7வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நடைபெற இருப்பதால், அந்த பகுதிகளில் இன்று மாலையும் பிரசாரம் ஓய்வுபெறுகிறது.
மக்களவை தேர்தலுக்கான கடைசிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18வது மக்களவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், கடைசி மற்றும் 7வது கட்ட தேர்தல் ஜூன் 1ந்தேதி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஜூன் 4ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியை கைப்பற்ற இண்டி கூட்டணியும் தீவிரமான தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 7 கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் ஜுன் 1ந்தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று மாலையுடன் அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு அலுவலங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நாளை மறுதினம் காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிகறது. இதையொட்டி, அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட உத்தரபிரதேசம், பீகார், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 299 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த 299 பேருக்கு குறைந்தது ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இதில் 111 வேட்பாளர்கள் ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர். 84 வேட்பாளர்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை சொத்துகளை வைத்துள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.198 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கட்சி வாரியாகப் பார்த்தால்பாஜகவைச் சேர்ந்த 44 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸில் 30பேரும், பகுஜன் சமாஜ்கட்சியில் 22 பேரும், சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி), ஆம் ஆத்மியில் தலா 13 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
7-வது கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக அளவில் சொத்து வைத்திருப்பது முன்னாள் மத்திய அமைச்சரும், பஞ்சாபின் பதிண்டா தொகுதியில் போட்டியிடுபவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரில் ரூ.198 கோடிக்கு சொத்து உள்ளது. இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்தபடியாக ஒடிசாவின் கேந்திரபரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பைஜயந்த் பாண்டா ரூ.148 கோடிக்கு சொத்துவைத்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த சஞ்சய்டாண்டனுக்கு ரூ.111 கோடியும், இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யசிங்குக்கு ரூ.100 கோடியும், நடிகையும், பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிடுபவருமான கங்கனா ரனாவத்துக்கு ரூ.91 கோடியும் சொத்து உள்ளது.
கடைசிகட்ட தேர்தல் வேட்பாளர்களில் மிகவும் குறைந்த சொத்து கொண்டவராக ஒடிசாவைச் சேர்ந்த பானுமதி தாஸுக்கு வெறும் ரூ.1,500 மதிப்பு கொண்ட சொத்துமட்டுமே உள்ளது. இவர் ஜெகத்சிங்பூரில் (தனிதொகுதி) போட்டியிடுகிறார். லூதியாணாவைச் சேர்ந்த ராஜீவ் குமார் மெஹ்ராவுக்கு ரூ.2,500 மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது. இதேபோல், பலராம் மண்டல் (ஜாதவ்பூர்), ஸ்வபன் தாஸ் (கொல்கத்தா வடக்கு), கனியாலால் (லூதியானா) ஆகிய வேட்பாளர்களுக்கு தலா ரூ.2,500 முதல் ரூ.3,100 மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளன.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை இன்று மாலை தொடங்குகிறார் பிரதமர் மோடி…