மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு, கேஎல் ராகுல் மீண்டும் தேர்வு செய்யப்படாதது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இந்திய அணியில் நிலவும் அரசியல் எப்போதும் ஓயாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போதைய நிலையில் கேஎல் ராகுல் நல்ல ஃபார்மில் உள்ளார். கடந்தமுறை ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால், ஒருநாள் & டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலேயே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோசமான நிலையிலுள்ள பிரித்விஷா மற்றும் சஹா ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இதனால் எந்தப் புண்ணியமும் இல்லாமல் போனது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, இப்போதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார் கேஎல் ராகுல்.