ல்லப்புரம்

கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.   சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.    தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களில் இந்த தாக்குதல் நடந்தது.   இதற்கு இஸ்லாமிய இயக்கமான ஐஎஸ் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை தீவிரவாதிகள் முகத்தை மறைக்கும் புர்கா அணிந்திருந்ததால் சிசிடிவி பதிவில் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.   இதை ஒட்டி இலங்கை அரசு புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் அனைத்து உடைகளுக்கும் தடை விதித்தது.

இலங்கையின் இந்த உத்தரவை சிவசேனா கட்சி இந்தியாவில் புர்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தது.   இதற்கு பாஜக கூட்டணியின் மற்றொரு கட்சி தலைவரான ராமதாஸ் அதவாலே எதிர்ப்பு தெரிவித்தார்.   இதை ஒட்டி பல கட்சிகளிடையே சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் இன்று அனுப்பி உள்ள சுற்றரிக்கையில் தங்கள் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து கல்லூரிகளிலும் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட உடைகளுக்கு தடை விதித்துளதாக தெரிவித்துள்ளது.   இந்த கழகம் கேரளா முழுவதும் 35 கல்லூரிகளை நடத்தி வருகிறது.   இதில் பயில்வோரில் 65% பேர் இஸ்லாமியப் பெண்கள் ஆவாரகள்.