திருவனந்தபுரம்: தா்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தமது வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.
இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை தொடர்ந்து காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகம் வந்து அவர் ஆவணங்களை சமர்ப்பித்தார். அவருடன், கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.பி.ஜெயராஜன், மாக்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தர்மடம் தொகுதியில் 2வது முறையாக பினராயி விஜயன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.