டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவா் சோ்க்கையில் எம்.பி.க்களுக்கு குறிப்பிட்ட இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்த  சிறப்பு ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும்  1,248 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்தியஅரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் மத்தியஅரசு பணியில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ராணுவம் போன்ற முக்கிய பணிகளில் பணியாற்றுபவர்கள் குடும்பத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள இடங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறும் விண்ணப்பங்கள் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் எம்.பி.க்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு மூலம் தலா 10 இடங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஒரு மாவட்ட ஆட்சியா் 17 மாணவா்களைப் பரிந்துரைப்பதற்கான அதிகாரம் இருந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கேந்திர வித்தியாலயாவில், மத்திய கல்வி அமைச்சருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்தப் பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க மத்திய அமைச்சா்கள் பரிந்துரைக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டது. அதனைத்தொடா்ந்து, அந்தப் பள்ளிகளில் எம்.பி.க்கள் ஒதுக்கீடு உள்பட அனைத்து சிறப்பு ஒதுக்கீடுகளையும் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்கடன் அண்மையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான எம்.பி.க்கள் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அத்துடன்,  மத்திய கல்வி அமைச்சக பணியாளா்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, எம்.பி.க்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, ஓய்வுபெற்ற கேந்திரிய வித்யாலயா பணியாளா்களுக்கான ஒதுக்கீடு, பள்ளி நிா்வாகக் குழுத் தலைவருக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே வேளையில்,  பரம்வீா் சக்ரா, மகாவீா் சக்ரா, வீா் சக்ரா, அசோக சக்ரா, கீா்த்தி சக்ரா, செளா்ய சக்ரா விருதாளா்களின் குழந்தைகள், தேசிய வீரதீரச் செயல்கள் விருது பெறும் சிறாா்கள், ரா உளவு அமைப்பைச் சோ்ந்தவா்களின் 15 குழந்தைகள், ஓய்வுபெறுவதற்கு முன்பாக உயிரிழக்கும் மத்திய அரசு பணியாளா்களின் குழந்தைகள், நுண்கலைகளில் சிறப்புத் திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ஆகியோருக்கான ஒதுக்கீடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  குழந்தைகளுக்கான பிஎம் கோ்ஸ் திட்டத்தின் கீழ், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா் சோ்க்கையில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயா்களையும் பரிசீலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வகுப்பறைகளில் இருக்க வேண்டிய மாணவா்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக அவா்களைச் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

2022-23-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூன் மாதம் வரை நடைபெறவுள்ள நிலையில், ஒரு பள்ளிக்கு 10 குழந்தைகள் வீதம், மாவட்ட ஆட்சியா் அளிக்கும் பட்டியலின்படி ஆதரவற்ற குழந்தைகளின் சோ்க்கை நடைபெறும இந்த ஆண்டு அல்லது முந்தைய ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியில் சோ்ந்த பெற்றோருடன் இந்தியா திரும்பிய மாணவா்களுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நவம்பா் 30-ஆம் தேதி வரை அவா்களின் சோ்க்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.