டெல்லி
தாம் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது உச்சநீதிமன்ரம் அவ்வழக்கில் அவருக்கு கடந்த ஜூலை 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தும், அதற்கு முன்பே ஜூன் 26-ந்தேதி, மதுபான கொள்கையை நிறைவேற்றியதில் நடந்த ஊழல் தொடர்பாக கெஜ்ரிவாலை சி.பி.ஐ. கைது செய்தது. கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமறம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். பொதுவெளியில் வழக்கின் தகுதிநிலை குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது எனவும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் ஆஜராக வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள், இவ்வழக்குக்கும் பொருந்தும் என்றும் கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினர்.
நேற்று முன்தினம் மாலை விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் தொண்டர்களிடம்,
”நான் டெல்லி முதவர் பதவியில் இருந்து இரண்டு நாட்களில் விலகவுள்ளேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைத்தால் மீண்டும் எனக்கு வாக்களிக்கட்டும். முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் துணிச்சலையும் உடைப்பதுதான் லட்சியமாக இருந்தது.
அதனால் என்னை சிறைக்கு அனுப்பினார்கள். ஆனால் நம்முடைய கட்சி உடையவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் சிறையிலிருந்தபோது, ராஜினாமா செய்யவில்லை. நான் அவர்களின் பார்முலாவை தோல்வியடையச் செய்ய விரும்பினேன். ஒரு அரசை ஏன் சிறையில் இருந்து இயக்க முடியாது என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேட்டது. சிறையில் இருந்தும் ஒரு அரசு இயங்க முடியும் என்பதை உச்சநீதிமன்றம் நிரூபித்துள்ளது.”
என்று கூறியுள்ளார்.
Kejriwal, Delhi CM, resign,