ஸ்ரீநகர்:

கொல்கத்தாவிலிருந்து வந்த 5 சுற்றுலாப் பயணிகளை, தன்னுயிரை கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் 32 வயது ரூஃப் அகமது தத்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்நாக் மாவட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த 5 பேர் படகுசவாரி சென்றனர்.

32 வயதான ரூஃப் அகமது தர் என்பவர் படகோட்டியாகவும், சுற்றுலாப் பயணிகளின் கைடு ஆகவும் இருந்தார்.

பஹல்காம் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகு கவிழந்து. 5 பேரும் நீருக்குள் மூழ்கினர்.
விரைந்து 5 பேரையும் காப்பாற்றினார் ரூஃப் அகமது தர். ஆனால், அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5 பேரை காப்பாற்றி தன் உயிரை இழந்த ரூஃப் அகமது தர்ரின் குடும்பத்துக்கு ஜம்மு போலீஸார் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.