பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ஓலாக கேப்ஸ் உரிமத்தை, மாநில போக்குவரத்து துறை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஓலா கேப்ஸ் சேவை செயல்பட்டு வருகிறது. நாம் இருக்கும் இடத்தில் இருந்தே, எங்கு போக வேண்டுமோ அங்கு பயணம் செய்யும் வகையில் தற்போது டாக்சி சேவைகளை உபேர், ஓலா போன்ற பல்வேறு தனியர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், கர்நாடகாவில் ஓலா கேப்ஸ் சேவையை மாநில அரசு செய்துள்ளது. 6 மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓலா வண்டி ஓட்டுனர்கள் நிபந்தனைகளை மீறி வண்டிகளை இயக்கி வருவதால், 6 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஓலா கேப்ஸ் டாக்சிகள் செல்வதற்கு மாநிலங்களில் சாலைகள் இல்லை என்று தெரிவித்து உள்ள கர்நாடகா போக்குவரத்து கழகம் ஒலா காப்ஸ் உரிமங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே , மாநில முதல்வர் ஹெச் டி குமாரசாமி டாக்ஸி சேவைக்கான ஆப் (அப்ளிகேஷன்) உருவாக்கி இருந்தார். HDK Cabs என பெயரிடப்பட்டுள்ள இந்த டாக்சி சேவையை மாநிலத்தில் அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதற்காகவே ஓலா கேப்ஸ் உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவி வருகின்றன…
மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஓலா காப்ஸ் டாக்சி ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.