பெங்களூரு
கர்நாடக மாநில கோவில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட மிகக் குறைவாக மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பருவமழைக் காலம் வர உள்ளதால் நல்ல மழை பெய்ய வேண்டும் என தென்னக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடக அரசு இது குறித்து அரசின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து கோவில்களுகும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் ”தற்போது கர்நாடகாவில் கடும் வரட்சி நிலவி வருகிறது. பல நீர் ஆதாரங்கள் வரண்டுள்ளன. மாநில மக்களின் முதல் தேவை போதுமான அளவு மழை ஆகும்.
எனவே அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இதற்கான சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும். அத்துடன் யாகங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றையும் மழையை வேண்டிநடத்த வேண்டும். இது போல வழக்கம் ஏற்கனவே இருந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.