‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.

இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் ‘புஷ்பா’ படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படம் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் பிரபல நடன இயக்குனர் ஜானி ஒரு பாடலுக்கு நடனமைத்துள்ளார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே அல்லு அர்ஜுன் மற்றும் ஜானி இணைந்த புட்டபொம்மா பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]