
புனே:
கடந்த 2009 ம் வருடம் புனேயில் ஐ.டி., பெண் ஊழியர் நயனா புஜாரியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் மகேஷ் தாக்கூர், யோகேஷ் ராவத், விஸ்வாஷ் கண்டம் ஆகிய மூவருக்கு துாக்கு தண்டனை விதித்து புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலம் காரடி பகுதில் ஐ.டி. ஊழியர் நயானா புஜாரி பேருந்துக்காக காத்திருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகு கழித்து ஜரேவாடி பகுதியில் நயானா புஜாரி உடல் சடலமாக கிடந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கொலையாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நால்வரில் ஒருவரான ராஜேஸ் சவுத்ஜிரி அப்ரூவர் ஆனதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
[youtube-feed feed=1]