சென்னை:
நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய ஒரு ஆட்டத்தை (15வது லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி) தவிர அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தோல்வி காரணமாக புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு சென்ற நிலையில், நேற்று பெற்ற அதிரடி வெற்றி காரணமாக மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

நேற்று சேன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபில் தொடரின் 23-வது லீக் ஆட்டத் தில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க ஆட்டக்கரர்களாக களமிறங்கிய கிறிஸ் லெயன் 0(5), சுனில் நரேன் 6(5) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர். ஆன்றே ரசல் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50(44) ரன்கள் குவித்தார்.
சென்னை அணி தரப்பில் தீபக் சஹர் அதிரடி பந்து வீச்ச மூலம் 3 விக்கெட் குவித்தார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் டுபிளசிஸ் களமிறங்கினர். ஷேன் வாட்சன் 9 பந்தில் 17ரன்களை குவித்த நிலையில் சுனில் நரேனின் பந்துவீச்சில் பையூஷ் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா அதிரடி சாகசங்களை நிகழ்த்துவார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் 13 பந்தில் 14 ரன்களை எடுத்த நிலையில் சுனில் நரேனின் பந்துவீச்சில் பையூஷ் சாவ்லாவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய அம்பதி ராயு 31 ரன்னில் வெளியேறி டூப்ளசிஸ் ஆட்டமிழக்காமல் நிதானமாக ஆடி வந்தார். அவர் 45 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டத்தின் 17.2-வது ஓவரில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 111 ரன்கள் குவித்து. இதன் காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பெற்றுள்ளது.
சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக் சஹர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியை காண நடிகர் தனுஷ் தனது மகனுட்ன் சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்திருந்தார். தனுஷ் மகன் சிஎஸ்கே அணியின் கலரான மஞ்சள் உடையில் வந்திருந்தார்.
அதுபோல கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானும் ஆட்டத்தை காண வந்திருந்தார். அவருடன் தமிழக பிரபல இயக்குனர் அட்லி உள்பட பல சினிமான நட்சத்திரங்களும் நேற்றைய ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்திருந்தனர்.
நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியும் இருந்து. சிஎஸ்கே வெற்றி பெற்றதும் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
[youtube-feed feed=1]