புதுடெல்லி:
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சிக்குப் பின், ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை, 2015ல் அறிவித்தது. அப்போது முதல், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரு அரண்மனையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.