ஐதராபாத்:
இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தெலுங்கானா மாநில அரசு, தெலுங்கானாவில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் விடுமுறை விட்டு கவுரவப்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு நடைபெற்று வருகிறது. இன்று (மார்ச் 8-ம் தேதி) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பணிபுரியும் பெண்கள் அனைவருக்கும் இன்று விடுமுறை விடப்படுகிறது என தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா மாநிலத்தின் தலைமை செயலாளரான எஸ்.கே.ஜோஷி, தெலுங்கானா மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என கூறினார்.