உத்தரகாண்ட் மாநிலம் தேராதூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால், 78 வயதாகும் இவர் 15 சவரன் தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்துள்ளார்.

ராகுல் காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் அதன் காரணமாக தனது சொத்துக்களை ராகுல் காந்தி பெயரில் உயில் எழுதி உள்ளதாகவும் கூறினார்.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பிரிதம் சிங் முன்னிலையில் உயில் எழுதிய புஷ்பா முஞ்சியால் அதனை தேராதூன் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
Patrikai.com official YouTube Channel