டில்லி
வரும் கணக்கு ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் 6.8% ஆக குறையும் என ஒரு மதிப்பீடு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஃபிட்ச் ரேடிங் என்பது நியூயார்க் மற்றும் லண்டனில் அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் மதிப்பீடு ஆகும். இது நாட்டின் உற்பத்தி மற்றும் கடன் உள்ளிட்ட பல இனங்களையும் மதிப்பீடு செய்து ஆய்வு அறிக்கைகளை அளிக்கிறது. இந்த ஆய்வு இந்தியாவின் உற்பத்தி திறன் பற்றி நடத்தப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கையில், “இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திறன் 7.8% ஆக இருக்கும் என முதலில் எதிர்பார்க்கபட்டது. ஆனால் கடந்த டிசம்பர் மத கணக்கெடுப்பின் போது அது படிப்படியக 7.3% ஆக குறைந்து அதன் பிறகு 7.2% ஆக இருந்தது. அதன் பிறகு நடந்த மதிப்பீட்டில் அது 7% ஆக இருக்கும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளது. இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என கூறப்பட்டது. அதே நேரத்தில் அது உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்கத்தினால் உள்நாட்டு உற்பத்தி 6.8% ஆக மேலும் குறையக்கூடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ள்து.