கீவ்: உக்ரைன் நாட்டின் லிவிட் நகரில் இரு நாட்டு படைகளுக்கு இடையே நடைபெற் றதுப்பாக்கிச்சண்டையில், அந்த பகுதியில் காரில் சென்ற இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை இந்திய அமைச்சர் வி.கே.சிங்கும் உறுதிபடுத்தி உள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இன்று 9வது நாளாக தொடர்கிறது. ரஷியாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகளில் நொறுக்கப்பட்டுள்ளன. சில நகரங்கள் ரஷியாவின் பிடிக்குள் சென்றுள்ளது. தற்போது தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களை கைப்பற்றி ரஷிய படை முனைப்பு காட்டி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. ‘ஆபரேஷன் கங்கா’ என்ற இந்த திட்டத்தில் தனியார் விமானங்களுடன், விமானப்படை விமானங்களும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன. மேலும் 4 அமைச்சர்களும் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்தியஅமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி ஹங்கேரிக்கும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவுக்கும், கிரண் ரெஜிஜூ சுலோவாகியாவுக்கும், வி.கே.சிங் போலந்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
உக்ரைன் நகருக்குள் விமானம் செல்ல முடியாத படி, உக்ரைன் தனது வான்பகுதியை மூடி உள்ளதால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை எல்லைப்பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு வரவழைத்து, அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. அதனப்டி, ஹங்கேரி, போலந்து, ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைன் லிவிங் நகரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் காரில் சென்ற இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் கீவ் நகர மருத்துவமனையில் அனுமதித்ததாக இளைஞர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்-வில் இருந்து வந்த மாணவர் சுடப்பட்டதால் பாதியிலேயே திரும்ப அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளதாக மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியுள்ளார்.
ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் இரண்டு மாணவர்கள் பலியான நிலையில், மேலும் பலர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத நிலையில் சிக்கி உள்ளனர். இந்த நிலையில், மேலும் ஒருவர் மாணவர்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது அங்குள்ள இந்தியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.