சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் ரயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் முக்கியமானது UTS- Unreserved Ticketing System செயலி. இந்தியாவில் அன்ரிசர்வ்டு டிக்கெட், சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளையும் பதிவு செய்வதற்காக 2014ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தால் யுடிஎஸ் டிக்கெட் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
மொபைல் போனில் யுடிஎஸ் டிக்கெட் செயலியை நாம் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும் அதன் வாயிலாக நாம் டிக்கெட்டுகளை வாங்கி கொள்ளலாம்., அதாவது, பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை இந்த செயலியில் நான் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில் நிலையங்களில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் யுடிஎஸ் செயலி பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது யுடிஎஸ் செயலியில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களுமே தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் ஒன் (RailOne) செயலியில் உள்ளதால், எதற்கு ஒரே சேவைக்கு பல்வேறு செயலிகள் என்ற அடிப்படையில் யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.