
நேப்பிள்ஸ்: இத்தாலியில் நடைபெறும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில்(World University Games), இந்தியாவின் டூயூட் சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த தூரத்தைக் கடக்க இவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.32 விநாடிகள். இதற்கு முன்னர், உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில், 100 மீட்டர் ஓட்டத்திற்கு எந்த இந்தியரும் தகுதிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டுத் தொடரில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கமாகும் இது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், தனக்கு கடும் போட்டியாக ஓடிய ஸ்விட்சர்லாந்து நாட்டின் அஜ்லா டெல் போன்ட்டியை வெறும் 0.1 நேர வித்தியாசத்தில் மயிரிழையில் தோற்கடித்தார்.
முன்னதாக அரையிறுதிப் போட்டியில், டியூட் சந்த் 11.41 விநாடிகளை எடுத்துக்கொண்டு பந்தய தூரத்தைக் கடந்து இறுதிக்கு தகுபெற்றார். மேலும், காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற இவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.58 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]