ஃபிஷ்டைல், அருணாசலப் பிரதேசம்
சீனா எல்லையைத் தாண்டி 75 கிமீ உள்ளே பாலம் அமைத்துள்ளதாக பாஜக ம்க்களவை உறுப்பினர் தபிர் காவ் தெரிவித்ததை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இந்திய சீனா எல்லைக்கு 75 கிமீ தூரத்தில் அமைந்துள்ள அஞ்சா மாவட்டம் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் மக்களவை உறுப்பினரான தபிர் காவ் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தப் பகுதி மலை, காடுகள் மற்றும் நதிகள் உள்ளவை ஆகும். இந்தப் பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி தென்படுவதாக உள்ளூர் வாசிகள் கூறுவது உண்டு.
இந்நிலையில் தபிர் காவ், “அஞ்சா மாவட்டப் பகுதியில் ஒரு கிராம வாசி காட்டினுள் ஓடும் நதியின் நடுவே ஒரு மரப்பாலம் அமைக்கப்பட்டதை கண்டுள்ளார். அந்தப் பகுதியில் பல சீன ராணுவத்தினர் கூடாரம் அடித்துக் தங்கி இருந்துள்ளனர். அவர்களிடம் பேசிய போது அந்தப் பாலத்தை அமைத்ததைச் சீன ராணுவத்தினர் அந்த கிராம வாசியிட்ம் ஒப்புக் கொண்டூள்ளன்ர்.
கடந்த 2018 ஆம் வருடத்தில் இருந்தே எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் கூடாரம் அடித்துத் தங்குவது வழக்கமாக உள்ளது. தற்போது அவர்கள் இந்திய எல்லையில் இருந்து 75 கிமீ உள்ளே வந்து பாலம் அமைத்துள்ளனர். இந்த பகுதி மக்களின் பிரதிநிதி என்னும் முறையில் இதைச் சொல்ல வேண்டியது எனது கடமை ஆகும்” என தெரிவித்ட்துள்ளர்.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அமன் ஆனந்த், “இந்தப் பகுதியில் எந்த ஒரு ஊடுருவலும் நடக்கவில்லை. சீன ராணுவத்தினர் பாலம் அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது தவறான தகவல் ஆகும். ஃபிஷ்டைல் என அழைக்கப்படும் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக இந்திய ராணுவம் பல தற்காலிக பாலங்களை அமைத்து கொடுத்துள்ளது. அதில் ஒரு பாலத்தைப் பற்றி தபீர் தெரிவித்து இருக்கலாம்” எனக் கூறி உள்ளார்.