வருகிறது சனிப்பெயர்ச்சி(2020-2023)…
சனிப்பெயர்ச்சி குறித்த ஜேஎஸ்கே ஆன்மீகம் – அறிவுரை – இந்துமதம் முகநூல் பக்கத்தின் பதிவு
இந்த ராசிக்கெல்லாம்… நல்ல காலம் பிறக்குது.
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக கருதப்படுவது சனிகிரகம் ஆகும்*
சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது.
கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தார். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதிமுக்கியமான பதவியை வகிக்கின்றார்.
இவர் சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் ஆவார்.
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்கிறோம். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றது.
சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?
நவக்கிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.
அவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்துக்கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும்.
அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.
2020ஆம் ஆண்டில் எப்பொழுது சனிப்பெயர்ச்சி நடைபெறுகின்றது?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி (24.01.2020) சனிதேவர் திரயோதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது வெள்ளிக்கிழமையன்று காலை 09.57 மணியளவில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.
சனிதேவர் மகர ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச் செயல்களை இனி வருகின்ற இரண்டரை வருடம் அளிக்கவுள்ளது.
வரும் சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார்?
மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.
வரும் சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்?
தனுசு, கடகம், மகரம் மற்றும் மீனம்.
வரும் சனிப்பெயர்ச்சியில் வீடு, மனை வாங்கும் யோகம் யாருக்கு?
துலாம், விருச்சிகம்.
வரும் சனிப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் நல்ல காலம் பிறக்குது?
சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.
வரும் சனிப்பெயர்ச்சியில் உயர்பதவி கிடைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்?
மேஷம், ரிஷபம், கன்னி, சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம்.
மேலும், சனிப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப சனிபகவான் அளிப்பார்.