நீண்ட இடைவெளிக்கு பின் இரு படங்களை பாலா இயக்குகிறார். அதில் முதல் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இதில் அதர்வா ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாலாவின் பரதேசியில் அதர்வா நடித்துள்ளார் .
நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது . இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு எந்த மாதிரியான வேடம் இருக்கும் என்பது கேள்விக்குறியே.
திருச்செந்தூரில் விரைவில் படப்பிடிப்பு நடத்தயிருக்கிறார்களாம். ஒளிப்பதிவாளராக சுப்பிரமணியெம்மை ஒப்பந்தம் செய்துள்ளனர்.