லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டி இலங்கைக்கும், நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே இங்கிலாந்தில் உள்ள சோபியா கார்டன், கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக நாங்களும் மற்ற அணியினருக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நியூசிலாந்து மிரட்டி உள்ளது.
50 ஓவர்களை கொண்ட ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மாதம் ( மே) 30ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் ஜூலை 14ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இன்றைய போட்டியின்போது, டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இலங்கை அணி மட்டையுடன் களமிறங்கியது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திருமன்னே, கேப்டன் கருணாரத்னே களமிறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரின் 2-வது பந்திலே நியூசிலாந்து பவுலர் ஹென்றி, திருமன்னேவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய குஷால் பெரேரா, கருணாரத்னேவுடன் கூட்டு சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர். இந்த நிலையில், 9 ஓவரில் ஹென்றியின் பந்துக்கு குஷால் பெரேரா அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்ரிதலேயே ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேற இலங்கை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருந்தாலும் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கருணாரத்னே மட்டும், நியூசிலாந்து பவுலர்களின் பந்துக்களை சமாளித்து ஆடி அரை சதத்தை வந்தார். இறுதியில் இலங்கை அணி 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.டிமுத் கருணரத்னே 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் .
137 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி களமிறங்கயிது. 16.1 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குப்தில், முன்றோ இருவரும் அரை சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். குப்தில் 73 ரன்களுடனும், முன்றோ 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றி,
இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்த ஆல்ரவுண்டர் மேட் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.