உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலம் தவிர மற்ற 4 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி பெருவெற்றி பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்காக பிரியங்கா காந்தி கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்ட வந்த நிலையிலும், அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைத்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றி. இதிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.