
கண்ணூர்
இந்துப் பெண் ஓருவர் தன்னை ஒரு இஸ்லாமியர் திருமணம் செய்து பாலியல் அடிமையாக விற்க முயன்றதாக உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் பட்டினம் திட்டாவை சேர்ந்த ஒரு இந்துப் பெண் தனது பெற்றோர்களுடன் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்தப் பெண் பெங்களுருவில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த 2014ஆம் ஆண்டு கல்வி பயிலத் துவங்கி உள்ளார். அங்கு அவர் முகமது என்னும் இளைஞரை சந்தித்துள்ளார். பல சந்திப்புக்குப் பின் 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை வறுபுறித்தி முகமது பாலியல் உறவு கொண்டுள்ளார். அதை பதிவாக்கி அதை வெளியே தெரிவித்து விடுவதாக மிரட்டி அவருடன் இதைத் தொடர்ந்துள்ளார்.
அதன் பின் அவரை வலுக்கட்டாயமாக ஒரு மதரஸாவில் முகமது சேர்த்துள்ளார். கேரளாவின் இஸ்லாமிய அமைப்பான பியூப்பிள் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த சிலர் மூலம் அந்தப் பெண்ணுக்கு இஸ்லாமிய பெயரில் ஆதார் உள்ளிட்ட பல ஆவணங்களைப் பெற்று 2016ஆம் வருடம் திருமணத்தை பதிய வைத்துள்ளனர். இதன் மூலம் முகமதுவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் நிறைய பணங்களும் நகைகளும் ஒரு இஸ்லாமியர் அல்லாத பெண்ணை இஸ்லாமியராக மாற்றியமைக்காக ஒரு அடையாளம் தெரியாத சிலர் பரிசளித்துள்ளனர்.
அந்தப் பெண் முகமதுவின் குடும்பத்தை விட்டு செல்ல டிசம்பரில் முயன்றுள்ளார். ஆனால் முகமது கேரளா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்து அவரை மீண்டும் அடைந்திருக்கிறார். முகமது மற்றும் அவருடைய குடும்பத்தினரின் மிரட்டலுக்கு பயந்து முகமதுவுடன் செல்ல அந்தப் பெண் சம்மதித்துள்ளார். அவரை வீட்டுச் சிறையில் முகமதுவின் பெற்றோர் வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் அந்தப் பெண் முகமது மற்றும் அவர் குடும்பத்தினருடன் சவுதி அரேபியா சென்றுள்ளார். அங்கு அவர் இஸ்லாமிய தீவிரவாத வீடியோக்கள பார்க்க வற்புறுத்தப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் அந்தப் பெண்ணுக்கு ஒரு நண்பர் மூலம் மொபைல் ஃபோன் ஒன்றில் பேச சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவர் குஜராத்தில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனது நிலைய சொல்லி உள்ளார்.
சவுதியில் உள்ள அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர்கள் மூலம் அவர் கண்டுபிடிக்கப் பட்டு அவர் தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார். சில நாட்களில் முகமது தன்னை கடத்திச் சென்று ஐ எஸ் தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக விற்க திட்டமிட்டு இருந்ததாக அந்தப் பெண் கூறியதை அடுத்து முகமது மேல் கண்ணூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்களை தெரிவித்த அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் சேதுநாத் இந்த வழக்கில் மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய அமைப்பையும் விசாரணையில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுவரை முகமது தர்ப்பில் இருந்து இது குறித்து எதுவும் தகவல் வரவில்லை.
[youtube-feed feed=1]