டெல்லி: ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.  இன்று மக்களிடம் ஒரு வாக்கு கேட்கும் முன் அவர் பதில் சொல்ல வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது. ஆட்சி தக்க வைத்துக்கொள்ள ஜேஎம்எம் கூட்டணிகட்சிகள் முயல்கின்றன.  மாற்று கட்சியினரை தங்களது கட்சிகளுக்கு இழுக்கும் போட்டி கடுமையாக உள்ளது. இதனால், அங்கு குதிரை பேரங்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு,  அனல் பறக்கும் பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி, வாக்கு சேகரிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து,  பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ஜெய்ராம் ரமேஷ் சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்  தனது  சமூக வலைதள பக்கமான  எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எனன ஆனது?

இந்த மூன்று கேள்விகளுக்கு முதலில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்.

உயிரியல் அல்லாத பிரதமர் இன்று ஜார்க்கண்டில் பேரணி நடத்துகிறார். மக்களிடம் வாக்கு சேகரிக்க அவர் செல்வதற்கு முன்பு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் குறித்து  அவர் பதிலளிக்க வேண்டியது அவசியம். என வலியுறுத்தி உள்ளார்.

  1. ஜார்க்கண்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் தொடங்கப்படவில்லை.
  2. கோர்பா-லோஹர்தகா மற்றும் சத்ரா-கயா ரயில் பாதைகள் அமைப்பதற்கான வாக்குறுதி அளித்திருந்தார்.  லோஹர்தகா மற்றும் சத்ரா மக்கள் பல ஆண்டுகளாக சிறந்த ரயில் இணைப்பைக் கோரி வருகின்றனர், இதனால் உள்ளூர் மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும். ஆனால், ரயில்வே அமைச்சகம் அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளது. 
  3. கடந்த 2022-இல், ரயில்வே அமைச்சகம் சத்ரா-கயா ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த முக்கியமான ரயில் இணைப்புகளுக்காக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்த அத்தியாவசியத் திட்டங்களை முடிக்கப் பிரதமர் ஏதாவது செய்கிறாரா?

உயிரியல் அல்லாத பிரதமர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்த நிறுவனங்களை வழங்கத் தவறிவிட்டதற்கு அவர் பதிலளித்தேயாக வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.