திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்குள்ள குருபவான் நவக்கிரக தலங்களில் மிகவும் முக்கியமானது. குருபகவானுக்கு பரிகார தலமாக இந்த கோவில் போற்றப்படுகிறது.
திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பாடப்பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலங்குடியில் குவிந்து வருகின்றனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஏற்கனவே முதல்கட்ட லட்சார்ச்சனை விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நிகழும் மங்களகரமான விகாரி வருடம் 29.10.2019, ஐப்பசி மாதம் 12-ம் நாள், சித்த யோகம், விசாக நட்சத்திரத்தில், அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். அடுத்த வருடம் ( விகாரி) அக்டோபர் மாதம் மகர ராசிக்கு மாறுகிறார். சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு குருபகவான் தற்போது தனுசு ராசிக்கு வருகை தருகிறார். அவர் ஆட்சியாக இருக்கிறார்.
குருபெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் மற்றும் செயல் அலுவலர் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஆலங்குடி குருபகவான் கோவிலில் இன்று நடைபெற்ற லட்சார்சனை – வீடியோ