சான்பிரான்சிஸ்கோ:
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கூகுள் ஊழியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தை கையெலெடுத்தனர்.
பிரபல இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உலகம் முழுவதிலும் இருந்து அந்நிறுவனத்தை சேர்ந்த 20,000 ஊழியர்கள்கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், புகார் காரணமாக கூகுள் நிறுவனத்தில் இருந்து 12 முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்தது. இதையடுத்து கூகுள் சிஇஓ-வான சுந்தர் பிச்சை பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்களுக்கு உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த போராட்டத்தை வழிநடத்தியவர்களை பழிவாங்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை வழிநடத்திய கூகுளின் ஆய்வு தலைவர் மெரேடித் விட்டேக்கர் ((Meredith Whittaker)) மற்றும் youtube மார்கெட்டிங் மேலாளர் க்ளைரே ஸ்டாப்பில்டன் Claire Stapleton ஆகியோரின் பணிகளில் அந்த போராட்டத்திற்கு பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் பதிவியிறக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தங்களது போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததற்காக அவர்களை கூகூகுள் நிறுவனம் தண்டிப்பதாக கூகுள் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேறி போராட்டத்தை நடத்தினர்.