நியூயார்க்:
கையால் தொட்டதுமே மரணத்தை தரக்கூடிய மாத்திரையை அமெரிக்காவில் புழக்கத்திற்கு வந்துள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் பலவித போதை மருந்துகள் புழங்குவது உண்டு. அவற்றில் ஒன்று, Furanyl fentanyl என்பதாகும். இந்த போதை மாத்திரையை பயன்படுத்துவோரும் அதிகம்.
இந்த மாத்திரை போலவே மிக வீரியமான கலப்பட மாத்திரையை போதை மாஃபியா கும்பல் புழக்கத்தில் விட்டுள்ளது. இதில் அதிக போதை தரக்கூடிய ரசாயனங்கள் உள்ளன.
இந்த மாத்திரையை சாப்பிடக்கூட தேவையிலை, அதை தொட்டாலே அதிலுள்ள கெமிக்கல்கள் ரத்தத்தில் கலந்து வாந்தி, மூச்சு திணறல், மயக்கம் ஏற்படுமாம். நீண்டநேரம் கையில் வைத்திருந்தால் உயிரையும் குடித்துவிடுமாம்.
ஆகவே இந்த மாத்திரையை வாங்க வேண்டாம் என அமெரிக்க காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
[youtube-feed feed=1]